தமிழகத்தில் இன்று 7,427 பேருக்க கொரோனா; 189 பேர் சாவு
1 min read
Corona for 7,427 people in Tamil Nadu today; 189 deaths
21.6.2021
தமிழகத்தில் கடந்த 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 40 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 7,427 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,29,924 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,13,40,264 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 4,267 பேர் ஆண்கள், 3,160 பேர் பெண்கள்.
தமிழகத்தில் 15,281 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,37,209 ஆக உயர்ந்துள்ளது.
189 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 82 பேர் தனியார் மருத்துவமனையிலும், 107 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.இன்று கொரோனா சாவு இல்லை. தென்காசியில் இன்று 51 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மரணம் இல்லை. தூத்துக்குடியி் இன்று 99பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர்.