அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை
1 min read
Actor Rajinikanth undergoes medical examination at an American hospital
26.6.2021
நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகள் முடிந்து மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.