தமிழகத்தில் இன்று 4,013 பேருக்கு கொரோனா; 115 பேர் சாவு
1 min read
Corona for 4,013 people in Tamil Nadu today; 115 deaths
3.7.2021
தமிழகத்தில் இன்று 4,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்ற 115 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 43 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 52 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 4,013 பேருக்கு கொரோனா உறுதியானது. (நேற்று 4230 பேராக இருந்தது. )இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,92,420 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,319 பேர் ஆண்கள், 1,694 பேர் பெண்கள். இன்று 4,724 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,23,606 ஆக உயர்ந்துள்ளது.
115 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 115 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். (நேற்று 97 பேர் இறந்தனர்.) இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்து உள்ளது.
கோவையி்ல் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும் சேலத்தில் 251 பேருக்கும், தஞ்சையில் 232 பேருக்கும் திருப்பூரில் 231 பேருக்கும் சென்னையில் 227 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 32 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை. தென்காசியில் இன்று 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 51 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர்.