June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 42,766 பேருக்கு; 1,206 பேர் பலி

1 min read

For 42,766 in a single day in India; 1,206 killed

10/7/2021

இந்தியாவில் ஒரே நாளில் 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா சாவு 1,206 பேராக உயர்ந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42,766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் 43,393 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

1,206 பேர் சாவு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளனர். முந்தைய நாள் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக இருந்தது. ஒரே நாளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *