June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

68 நாட்களில் 38வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு சென்னையில் ஒரு லிட்டர் ரூ.101.67

1 min read

For the 38th time in 68 days, petrol price has gone up by Rs 101.67 per liter in Chennai

10.7.2021
கடந்த 68 நாட்களில் 38வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் ரூ.101.67 ஆக விற்பனை ஆனது.

பெட்ரோல் விலை

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தி வருகின்றன.
மே 4-ந் தேதியிலிருந்து கடந்த 68 நாட்களில் 38வது முறையாக நேற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னயைில்…

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் உள்ளது.
டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 100.91 ரூபாய், டீசல் லிட்டர் 89.88 ரூபாய்க்கும்; மும்பையில் பெட்ரோல், லிட்டர் 106.93 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 97.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *