June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இரண்டு தடுப்பூசிகளை கலந்து போட்டால் ‘டெல்டா கொரோனா’வில் இருந்து பாதுகாப்பு

1 min read

Protection against ‘delta corona’ if two vaccines are mixed

12.7.2021
“சினோவாக், அஸ்ட்ராஜெனேகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கலந்து போட்டால் டெல்டா, ஆல்பா ஆகிய உருமாறிய கோவிட் வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்” என, தாய்லாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தாய்லாந்தில் ஆய்வு

கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா, ஆல்பா ஆகிய வகைகள், மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. அந்த வைரஸ்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக தாய்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

இதுகுறித்து தாய்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் தெரிவித்து உள்ளதாவது:-

2 டோஸ்

சினோவாக் தடுப்பூசியில் 2 டோஸ் போட்டுக்கொண்டால், ஆல்பா வைரசுக்கு எதிராக போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால், டெல்டா வைரசுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. சினோவாக் தடுப்பூசியில் ஒரு டோசும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியில் ஒரு டோசும் கலந்து போட்டுக்கொண்டால், அதைவிட அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 90 சதவீதத்துக்கு மேல் செயல்திறன் இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *