June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,079 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு

1 min read

Corona for 2,079 people in Tamil Nadu today; 29 deaths

18.7.2021

தமிழகத்தில் இன்று தமிழகத்தில் இன்று 2,079 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 29 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 53 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 67 நாட்களாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,079 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,202 பேர் ஆண்கள், 877 பேர் பெண்கள். இன்று 2,743 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,73,781 ஆக உயர்ந்துள்ளது.

29 பேர் சாவு

இன்று கொரோனாவுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் இன்று 220 பேருக்கும், சென்னையில் 150 பேருக்கும், சேலத்தில் 142 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், திருப்பூரில் 121 பேருக்கும், தஞ்சையில் 120 பேருக்கும், செங்கல்பட்டில் 118 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், தூத்துக்குடியில் 17 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *