June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பொங்கல்பானையுடன் கண்ணாயிரம்/ சிறுகதை

1 min read

Kanayiram with Pongal paanai / short story by thabasukumar

21/7/2021
கண்ணாயிரம் வீட்டிலிருந்து ஓடிய சேவக்கோழி யை தேடி காட்டுக்குள் சென்றார். அங்கு சிவப்பு நிற சேவக்கோழியும், வெள்ளை நிற சேவக்கோழியும்
நின்றன. கண்ணாயிரத்துக்கு தனது வீட்டிலிருந்து தப்பி ஓடியது சிவப்பு சேவலா வெள்ளை சேவலா என்ற சந்தேகம் ஏற்பட்டது. மோகினிக்கு சிவப்பு சேலை வாங்கியதால் மோகினிக்கு சிவப்பு சேவல்தான் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
சிவப்பு சேவலை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அந்த சேவலுக்கு சொந்தக்காரர் அரிவாளுடன் கண்ணாயிரம் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.
கண்ணாயிரம் மனைவி அவரை அமைதிப்படுத்தி சிவப்பு கோழியை கொடுத்து அனுப்பினார். காலில் கயிறு உள்ள வெள்ளைச் சேவலை பிடித்து வருமாறு கண்ணாயிரத்தை அவர் மனைவி விரட்டினார். கண்ணாயிரம் முள்ளு காட்டுக்குள் புகுந்து காயத்துடன் ரத்தம் வழிய வெள்ளை நிறசேவலைபிடித்துக்கொண்டு வீட்டுக்குவந்தார். வீட்டில் வந்து சேவலைகட்டிப் போட்டார். அவர் மீது வடிந்த ரத்தத்தை பார்த்து அவர் மனைவி சத்தம்போட்டார். கண்ணாயிரம் புன்னகையுடன் துடைத்து விட்டார்.
இரவு வந்தது. கண்ணாயிரம் மனைவி பூஜை பொருட்கள் வாங்கி தட்டில் வைத்தார். ஒரு பானையில் பொங்கல் வைத்து தயாராக ஒரு ஓரத்தில் வைத்தார். பதினோரு மணி நெருங்கியது. கண்ணாயிரம் நன்றாக குளித்துவிட்டு முகத்தில் பவுடர் பூசினார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்தார். தோளில் துண்டு போட்டார். அங்கும் இங்கும் நடந்து பார்த்தார். கண்ணாடியில் முன்நின்று அழகு பார்த்தார். என்ன பொண்ணுப் பார்க்கவா போறீங்க என்று கேலிசெய்தார். மோகினியை பார்க்கபோறோமல்லா அழகா இருந்தால்தானேஅதுக்கு புடிக்கும் என்று சிரித்தார். அப்போது கோடாங்கியும் மோட்டார் சைக்கிள் வாலிபரும் அங்கு வந்தனர். கோடாங்கியும் கண்ணாயிரம் மனைவி வீட்டில் செம்பில் இருந்த தண்ணீர்பொங்கி வழிந்துவிட்டது என்றார்.
அப்போது கண்ணாயிரம் இல்ல.. இல்ல எலி தட்டிவி்ட்டுவி்ட்டது என்றார்.
மனைவி முறைத்து பார்த்ததும் இல்ல. இல்ல மோகினிதான் கோபத்தில்தட்டிவிட்டிருக்கும் என்றார். கண்ணாயிரம்.
சொல்லாதே என்று மனைவியிடம் சைகையால்சொன்னார். ஆனால்அவர்கேட்கவில்லை. கண்ணாயிரம்கண்களை மூடிக்கொண்டு நின்றார். பின்னர் வீட்டுக்குள்ளிருந்து இரண்டு கறுப்பு கம்பளிகளைஎடுத்துவந்தார். ஒன்றை மோட்டார் சைக்கிள்வாலிபரிடம் கொடுத்தார்.மற்றொன்றை கண்ணாயிரம்போர்த்திக் கொண்டார்.
கோடாங்கி பூஜைபொருட்களை ஒரு பையில் எடுத்துரைத்தார். மோகினி தட்டிவிட்டதண்ணீர் செம்பைகேட்டுவாங்கினார். பொங்கல்பானையைகண்ணாயிரத்தை தூக்கிகொண்டுவரும்படிகூறினார். மோட்டார்சைக்கிள் வாலிபரிடம் வெள்ளசேவலை கையில்கொண்டுவருமாறுசொன்னார். கோடாங்கி தோளில்பையுடன் கையில் கம்புடன் புறப்பட்டார் அவர் பின்னால் கண்ணாயிரம் பொகங்கல் பானையை தலையில் சுமந்தபடி நடந்தார். அவர் பின்னால் வாலிபர் சேவக்கோழியுடன் வந்தார் கண்ணாயிரம். அந்தவாலிபரிடம்சேவககோழியைதன்னிடம்தருமாறுகேட்டார். அவர் மறுத்துவிட்டார். பொங்கல்பானையைசுமக்குமாறுசொன்னார். அதற்கும்அந்தவாலிபர்மறுத்துவிட்டார் கண்ணாயிரத்துக்குகோபம்பொங்கியது. வேறுவழியின்றிநடந்தார் கோடாங்கிபாதிவழியில்தீபந்தத்தைகொளுத்திமற்றொருகையில்ஏந்திக்கொண்டார். அவரைபார்க்கவேபயமாக இருந்தது. கண்ணாயிரம்பொங்கலுபானை சூடுதாங்காமல் தலையிலிருந்துகீழேஇறக்கி வைத்தார். கோடாங்கிஅவரைசத்தம்போட்டார். கண்ணாயிரம்கம்புளியைதலைவரைமூடிக்கொண்டுஅதற்குமேல்பொங்கல்பானையைதூக்கிக்கொண்டுநடந்தார். திடீரென்றுஅவருக்குவேட்டிஅவிழ்ந்தது. வாலிபரிடம்வேட்டியைகட்டிவிடுடாஎன்றுகண்ணாயிரம்ரர்கூறினார். அப்போதும்அவன்கேட்கவில்லை உடனேகண்ணாயிரம்பொங்கல்பானையைஇறக்கிவைத்துவிட்டுவேட்டியைகட்டினார். பாதிவரைபொங்கல்பானையைநான்சுமந்துவிட்டேன். இனிவாலிபர்தான்சுமக்கவேண்டும்என்றுஅடம்பிடித்தார். உடனேகோடாங்கிசமரசமுயற்சியில்ஈடுபட்டார் வாலிபர்ஏற்றுக்கொண்டார். பின்னர்வாலிபர்பொங்கல்பானையைதூக்கினார். கண்ணாயிரம் சேவக்கோழியைகையில்வைத்துஅசைத்தபடிவந்தார். அது கொக்.. கொக்.. என்று கத்தியது கோடாங்கிகோபத்துடன்கண்ணாயிரத்தைகண்டித்தார். கத்தாமபாத்துக்கோ என்றுஎச்சரித்தார்
-வே. தபசுக்குமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *