தமிழகத்தில் மேலும் 1,985 பேருக்கு கொரோனா: 30 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for another 1,985 people in Tamil Nadu: 30 dead
6/8/2021
தமிழகத்தில் ஒரே நாளில் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 1908 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழ்நாடு கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழ் நாட்டில் இன்று 1,985 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,83,71,633 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,148 பேர் ஆண்கள், 837 பேர் பெண்கள். 1,908 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,16,938 ஆக உயர்ந்துள்ளது.
30 பேர் சாவு
இன்று 30 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கோவை
கோவையில் இன்று 239 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், திருவள்ளூரில் 98 பேருக்கும், தஞ்சையில் 93 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 30 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 18 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.