June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி; மத்திய மந்திரி உறுதி

1 min read

Children should be vaccinated soon; Confirmed by the Union Minister

7.8.2021
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தடுப்பூசி போடப்படும் என மத்திய மந்திரி கூறினார்.

மத்தியய சுகாதார, குடும்பநலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொடர் முயற்சி

தற்போது இந்தியா முழுவதும் இதுவரை 50கோடிக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்வதற்கு, மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறது. ஒரு நாளைக்கு 2.5 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால். இன்று ஒரு நாளைக்கு 40லட்சமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால், இன்னும் சிறந்த முறையில் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கு…

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்தியா முழுவதும் 50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது பெருமையாகவுள்ளது. அதற்காக ஊடகத்துறையினரான உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் தடுப்பூசி மிகவும் அவசியம் என்ற செய்தியை மக்களிடம் சேர்த்துள்ளிர்கள்.” என தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *