நீதிபதிகளை இழிவுப்படுத்தியதாக 5 பேர் கைது
1 min read
5 arrested for insulting judges
8.8.2021
நீதிபதிகள் பற்றிய அவதூறு பதிவுகளுக்காக இதுவரை 5 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
நீதிபதி கொலை
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி சமீபத்தில் ஜீப் ஏற்றி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு பற்றிய வழக்கை தாமாக முன் வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி ரமணா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விசாரணை நிறுவனங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
“நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பற்றி ஓரிரு இடங்களில், சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை. அது எனக்குத் தெரியும். சி.பி.ஐ.யின் அணுகுமுறையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் சிபிஐ.யின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இதனை விசாரிக்க வருந்துகிறேன்.” என்று கூறினார்.
5 பேர் கைது
இந்த நிலையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறைக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் செய்ததாக இதுவரை 5 பேர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிக்கினர். இந்த வழக்கின் விசாரணை இன்டர்போல், எம்.எல்.ஏ.டி. உதவியுடன் தொடரும் என சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.