இந்தியாவில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா; 491 பேர் சாவு
1 min read
Corona for 39,070 newcomers in India; 491 deaths
8.8.2021
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 491 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 39 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,19,34,455 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,862 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,99,771 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,06,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.30 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 492 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.