August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

1 min read

India’s Pavina Patel advances to Paralympics final

28.8.2021

டோக்கியோ பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பாரா ஒலிம்பிக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டி

இதனை தொடர்ந்து, காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன்பின் நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவீனா பென் பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கான பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *