இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பரப்புரை
1 min read
TVK candidate must lose their deposit in the by-election: Edappadi Palaniswami campaigns
24.9.2026
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
”அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு. குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. ஓட்டுபோட்ட மக்களை மறந்து தவெகவில் சேர்ந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தின்போது முதல்வர் விஜய் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீங்களா நாட்டை காப்பாற்ற போகிறீர்கள்? 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒரு கட்சித் தலைவர், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார் என்பதை இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கரூர் வழக்கு இருக்கிறது. இன்னும் அந்த வழக்கு முழுமை பெறவில்லை. அது முழுமை பெறும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த தீர்ப்புக்குப் பிறகு தான் அந்தக் கட்சி தமிழகத்தில் இருக்குமா, இல்லையா என்பது முடிவாகும்.”
இவ்வாறு அவர் பேசினார்.