May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

மாபெரும் உண்ணாவிரதம்/சொல்லாராய்ச்சி/ முத்துமணி

1 min read

Maa perum Unna viratham/ Muthumani

29.8.2021

உண்ணாவிரதம் என்பது உணவு உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் விரதம். விரதம் என்பது தமிழ்ச் சொல் என்று என்பதால் உண்ணா நோன்பு…

நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் உண்ணாநோன்பு மேற்கொள்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. உடல் நலத்திற்காகச் சில குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாட்களில் மேற்கொள்ளப்படும். ஏகாதசி விரதம்.. போன்றவை.
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உண்டு இரண்டு நேரம் உண்ணாமல் இருப்பது போன்ற வேறு வேறு வகைகளும் இருக்கின்றன.
உயிரை வெறுத்து, உலகில் வாழ விரும்பாமல் உண்ணாநோன்பிருந்து உயிரை விட்டிருக்கிறார்கள்.. இதை வடக்கிருத்தல்.. என்பது கூட ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி, உண்ணாமல் அமர்ந்து உயிர் போகும் வரை மேற்கொள்ளப்படும் ஒருவகை நோன்பு.
அன்று சட்டத்தின் அடிப்படையில் அது குற்றம் என்று கருதப்படவில்லை.. கோப்பெருஞ்சோழன் தன் பிள்ளைகள் மேற்கொண்ட முறையற்ற வாழ்வின் மேல் வெறுப்பு கொண்டதால் அந்த முடிவுக்கு வந்தான்.

சரி இப்போது தொடங்கிய செய்திக்கு வருவோம்…
விரதம் என்பது தமிழ்ச்சொல் இல்லை… இப்போது அதுவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
நீண்ட நெடுங்காலமாக,” மாபெரும் உண்ணாவிரதம்’ என்ற அறிவிப்பைப் பார்த்திருக்கிறேன்… அப்போதெல்லாம் ஒரு சிந்தனை பிறக்கும். உண்ணாவிரதம் என்பது புரிகிறது உண்ணாமல் இருப்பது. அது என்ன மாபெரும் உண்ணாவிரதம்?
சிறிய மலை இருந்தால் மாபெரும் மலையும் இருக்கும். சிறுகடல் பெருங்கடல் மாக்கடல் இருக்கும். அப்படியானால் உண்ணாவிரதத்தில் கொஞ்சம் உண்ணாமல் இருப்பது மாபெரும் உண்ணாவிரதத்தில் அதிகமாக உண்ணாமல் இருப்பது என்ற பொருளா.?.. அல்லது உண்ணாவிரதம் என்பது சீக்கிரத்தில் முடியும் கூடியதாகவும், மாபெரும் உண்ணாவிரதம் என்பது நீண்ட நாட்களுக்கு உண்ணாமல் மேற்கொள்ளப்படும் நோன்பா? என்று கேட்டால். இல்லை. குறைந்த எண்ணிக்கையில் ஆட்கள் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து உண்ணாமல் இருப்பது உண்ணாவிரதம். அதுவே எண்ணிக்கையில் மிகுதியாக ஆட்கள் கலந்து கொண்டு உண்ணாமல் இருப்பது மாபெரும் உண்ணாவிரதம் என்று பொருள் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இது பிழையான ஒரு வழக்கு… உண்ணாவிரதம் பெரியது இல்லை .அதில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை பெரியது .
ஆர்ப்பாட்டம் மாபெரும் ஆர்ப்பாட்டம்… இதுவும் அதைப் போன்ற ஒரு பொருள் பயன்பாடுதான்..
இது குறித்தும் ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது.. மனிதர் கூடினால் மக்கள் கூட்டம் என்றுதானே சொல்லவேண்டும்… சாவிகள் ஒன்றாக இருந்தால் சாவிக்கொத்து என்று சொல்வதுபோல மாடுகள் ஒன்றாக இருந்தால் மந்தை என்று சொல்வது போல… கற்குவியல் எறும்புச் சாரை..

இன்று காலையில் செய்தித்தாளில் ஒரு செய்தியைப் படித்து மகிழ்ந்தேன் மிக அருமையான தமிழ்…

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..

ஆகா… என்றேன் படித்தவுடன்..
திரள் என்றால் கூட்டம். பெருந்திரள் என்றால் பெரிய கூட்டம்…
மாம்பழம் திரட்சியாக இருக்கிறது.. நல்ல பெரிதாக இருக்கிறது என்று பொருள்..
பொருளைத் திரட்டினான். தேடிச் சேர்த்து அளவில் உயர்த்தினான்.. கூட்டம் திரண்டது… பூரிக்கு மாவு திரட்டு… உலர்ந்து இருக்கும் மாவைத் தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் குவித்து அளவில் பெரிதாக ஒன்று சேர்த்து உருட்டி வைப்பது… கடைத்தெருவில் வேடிக்கை பார்க்க பெரிய கூட்டம் திரண்டு விட்டது..
பெரிய மாபெரும் என்பதெல்லாம்… ஏற்கனவே பெரிதாக இருக்கிற ஒன்றைக் குறிக்கிறது.. இமயமலை மாபெரும் மலை… அமெரிக்கா மாபெரும் நாடு.
திரள் என்பது சிறிதாக இருந்து சேர்த்து சேர்த்து அளவில் மிகுதியாகிறது. ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார் தனிநபர் உண்ணாநோன்பு. 10 பேர் சேர்ந்து உண்ணாமல் இருப்பது பிறர் உண்ணா நோன்பு. இன்னும் அதிக அளவில் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் சேர்ந்து உண்ணாமல் மேற்கொள்வது பெருந்திரள் உண்ணாநோன்பு
என்பதும்

எனவே பெருந்திரள் என்றால்… பெரிய அளவில் மக்கள் ஒன்றாகக் கூடுவது…
உண்ணா நோன்பு
பெருந்திரள் உண்ணாநோன்பு.

ஆர்ப்பாட்டம்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்… பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடி செய்யும் ஆர்ப்பாட்டம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். மாபெரும் ஆர்ப்பாட்டம் இல்லை

-தமிழ் முத்துமணி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.