அந்தமான் எந்தமான்…?/ சொல்லாராய்ச்சி/ முத்துமணி
1 min readAntha Maan / Tamil ilakkiyam by Muthumani
31/8/2021
அந்தமானைப் பாருங்கள் அழகு. எந்த மான் அழகு? அதோ அந்த மானா? அல்லது அந்தமானா?
இந்த மான் எந்தன் சொந்த மான். மான் போன்ற மாமன் மகளோ?
அம்மான் கலைமானா? கவரிமானா?
அத்தை மகனே போய் வரவா? அம்மான் மகனே போய் வரவா?
மாமன் மகன்.
அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா?
சேய்மையில் இருக்கும் ஒரு மானைக் குறிப்பதற்கு அந்த மான் என்று இடைவெளியோடு எழுதவேண்டும். அந்தமான் எனும் தீவைக் குறிக்கிற போது சொற்களுக்கிடையே இடைவெளியின்றிச் சேர்த்து எழுத வேண்டும்.
அம்மான் எனும் சொல் மாமா என்று மாறியது.. தாயோடு பிறந்தவன் அம்மான். பிறகு மேலும் அச்சொல் மாமன் என்றும் மாமா என்றும் மாறிப்போனது..
அந்த மனிதரை எனக்குத் தெரியாது.
அவரை எனக்குத் தெரியாது..
மேற்கண்ட வாக்கியங்களுள்… எது சரியானது…?
ஒருவரை அல்லது ஒன்றை ச் சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுவது தமிழில் சுட்டெழுத்து..அ இ உ
அந்த மனிதர் என் தந்தை என்று சொல்லும்போது, ஒரு நெருடல் ஏற்படுகிறது. அவர் என் தந்தை என்று சொல்லும்போது அத்தகைய உணர்வு இல்லை.. நம் மொழியை நாமே தவறாகப் பயன்படுத்தும்போது நம்மை அறியாமலேயே அது தவறு என்பதை உணர்ந்துவிடுவோம். பெரும்பாலும் தவறாக எழுத முடியாது…
அ
இ
என்பவை, சுட்டிக் காட்ட உதவும் எழுத்து கள்.
உ.. என்பதும் முற்காலத்தில் சுட்டாகப் பயன்பட்டு வந்தது. இப்போது வழக்கில் இல்லை.
இ… அண்மைச் சுட்டு அதாவது அருகில் உள்ள வற்றை ச் சுட்டி சொல்ல உதவும்.
அ.. சேய்மைச் சுட்டு தொலைவில் உள்ளதைச் சுட்ட உதவும்..
அவ்வீடு
இவ்வீடு
அவ்வூர்
இவ்வூர்
இவ்வாண்டு
அவ்வாண்டு
அத்திருமண விழாவில்
இத்திருமண விழாவில்
இப்படி எழுதினாலே போதும்…
பிறகு
அந்த வீடு
இந்த வீடு
அந்த ஊர்
இந்த ஊர்… என்பவை…ஏன்? என்று கேட்டால் அவையும் சரியானவைதான்.. ஆனால் கொஞ்சம் செயற்கையானவை.
அ
இ… என்னும் சுட்டெழுத்துக்களைப் பயன்படுத்தும்போது பொருள் மயக்கம் ஏற்படுமானால், என்ன செய்வது என்று எண்ணிய இலக்கண ஆசிரியர் கண்டுபிடித்தவைதான், அந்த இந்த என்னும் சொற்கள். இவற்றைச் சுட்டுத் திரிபுகள் என்று கூறுவோம்… அ… என்பது அந்த என்றும், இ… என்பதே இந்த என்றும் திரிந்து போயின. அதாவது மாறிப்போயின..
அவ்வீடு என்பதுதான், அந்த வீடு என்று மாறிப்போனது…
சுட்டிக் கூறும்போது சொற்களின் பொருள் மாறுபடும் இடங்களில் மட்டும்… சுட்டுத் திரிபுகளைப் பயன்படுத்த வேண்டும்..
அந்தச் சூழல் உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்களை சுட்டும் போது பெரும்பாலும் ஏற்படும்..
அந்த இலை என்று சொன்னால் புரிகிறது. அவ்விலை என்று சொன்னால் எழுதினால் இலையா? அல்லது விலையா?. இலையைக் குறிக்கிறதா அல்லது விலையைக் குறிக்கிறதா? என்ற மயக்கம் ஏற்படும்.
அ+இலை… அவ்விலை
அ+விலை… அவ்விலை
அவ்விலை என்று எழுதும்போது மேற்கண்டவற்றில் எந்தப் பொருளில் பயன்படுகிறது என்ற குழப்பம் ஏற்படுவதால்
இப்பொருள் மாறுபாடு தெரிந்து கொள்வதற்காக… அந்த எனும் சுட்டுத்திரிபு பயன்படுகிறது..
இவ்வாறு கூறினான்…
இவ்வாறு கடலுக்குச் செல்கிறது.
மேற்கண்ட வாக்கியங்களில் சுட்டு எழுத்து பயன்படும் போது, பொருள் மாறுபாடு அடைவது நமக்குத் தெரிகிறதல்லவா?
எனவே…. இந்த ஆறு கடலுக்குச் செல்கிறது..
இவ்வாறு கூறினான்… இப்படிக் கூறினான்.
என்று எழுதவேண்டும்…
இக்கறை
அக்கறை…. பொருள் வேறுபாடு அறிக.
இவ்வாண்டு அவ்வாண்டு
இக்ககாடு அக்காடு
இச்சான்று அச்சான்று
இப்பகல் அப்பகல்
இந்நாள் அந்நாள்…
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்”
தமிழ் முத்துமணி