May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

குறைந்த கட்டணத்தில் ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி

1 min read

New 3 tier AC on low cost trains Luxury box

29.8.2021

ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி குறைவான கட்டணத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

சொகுசு ரெயில்

ரெயில்களில் புதிதாக 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. இந்த பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட 8 சதவீதம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான பயண அனுபவத்தை தருவதற்காக இந்த மலிவு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த 3 அடுக்கு ஏ.சி. சொகுசு வகுப்பு பெட்டிகளில் 83 படுக்கை வசதிகள் இருக்கும். 3 பக்கவாட்டு படுக்கைகள் இருக்கும்.

806 புதிய ஏ.சி. 3 அடுக்கு சொகுசு வகுப்பு பெட்டிகள் இந்த நிதி ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.