இந்தியாவில் மேலும் 30,941 பேருக்கு கொரோனா; 350 பேர் சாவு
1 min readCorona for a further 30,941 people in India; 350 deaths
31.8.2021
இந்தியாவில் இன்று மேலும் 30,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 350 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 941 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக அதிகரித்துள்ளது.
350 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,560 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 ஆக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,275 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,59,680 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,70,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.