June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

செப்டம்பர் மாத ராசி பலன்கள்(2021)

2 min read

Rasi palan for September 2021

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு செவ்வாய் 7-ந் தேதியும், சூரியன் 17-ந் தேதியும் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்கள். மேலும் புதன் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். எடுத்த காரியம் வெற்றி அடையும்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் 7-ந் தேதிக்கு பிறகு விலகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மைகள் தரஇயலாது. அவர் மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருள் நஷ்டத்தை ஏற்படுத்துவார். ஆனால் அப்போது அவரது 5-ம் இடத்துபார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
குடும்பம்: வசதிகள் பெருகும். மகிழச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையேஅன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். செவ்வாயால்7-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். அக்கம் பக்கத்தினர்ர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வாங்க யோகம் கூடி வரும்.23,24,25-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.3,4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம் சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம்19,20-ந் தேதிகளில் உறவினர்கள் வருகைகள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இது வரை உங்கள் உழைப்புக்கு தகுந்த மதிப்பு செல்வாக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். 7-ந் தேதிக்கு பிறகு அந்த பின்தங்கிய நிலை மாறும். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு காண்பர். புதிய பதவி கிடைக்கும். மேலும் 17,18-ந் தேதிகளில் எதிர்பாராத பலனை காணலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்: வருமானம் பெருகும்.அலைச்சல் அடியோடு மறையும். பயண பீதி மறையும். 17-ந் தேதிக்கு பிறகு பணப் புழக்கம் அதிகரிக்கும். தொழில் விருத்தி அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். இது வரை இருந்து வந்த எதிரிகளின் இடையூறு அடியோடு மறையும்.21,22,26,27-ந் தேதிகளில் சற்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். சிலருக்கு தலைகுனிவு வரலாம். 8,9-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பொதுநலம்- கலைஞர்கள் சுமாரான நிலையில் காணப்படுவீர்கள். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 6-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் 7-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம்
மாணவர்கள்- பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர்.மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்- நல்ல பலனை கிடைக்கப் பெறலாம்.குறிப்பாக பாசிபயறு நெல், கொண்டைக்கடலை , மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருவாய் கிடைகும். ஆடு,கோழி, பசு, வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் 7-ந் தேதிக்கு பிறகு கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.7-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 1,2,28,29,30-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 10,11-ந் தேதிகளில் சுகம் ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்படையும். 7-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.14,15,16-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்12,13-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.பச்சை 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும்.1,2,8,9,10,11,17,18,19,20,23,24, 25,28,29,30. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம். சிவன் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு இயனற உதவி செய்யுங்கள். காளி வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.16-ந் தேதி வரை சூரியனை தரிசனம் செய்யுங்கள். அதன்பிறகு குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

……..

                    ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்6-ந் தேதி வரை கன்னி ராசியில் இருந்து நற்பலனை கொடுப்பார்,அதன்பின் அவர் இடமாறி நன்மை தர இயலாதவர் ஆகிறார்அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் குரு 14-ந் தேதி மகர ராசிக்கும் மாறி நன்மை தருவார்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார்.. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்த்திருப்பார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிகசிறப்பாக இருந்தது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் தந்திருக்கலாம்.அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அப்போது அவரால் மனமகிழ்ச்சி ஏற்படும்.உற்சாகம் பிறக்கும்.நினைத்த காரியத்தை வெற்றி -கரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தி ஆகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையைஅறிந்து சரணடையும் நிலை வரலாம். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும்.
குடும்பம்- பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். 26,27-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.விருந்து,விழா என சென்று வருவீர்கள். நற்சுகம் ஏற்படும். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 21,22-ந் தேதிகளில் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்-அதிகபளுவை சுமக்க வேண்டியது இருக்கும். மேல் அதிகரரிகளுடன் அனுசரித்து போகவும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். சிலருக்கு மாற்றம் கிடைக்கலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அதே நேரம் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு கிடைக்கும். பதவி உயர்வு காண்பர்.உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 19,20-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும்.
வணிகம்-அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம் 14-ந் தேதிக்கு பிறகு வீண் பணவிரயம் இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும் தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லை16-ந் தேதிக்கு பிறகு மறையும் ஆனால்அதன்பின் எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. 10,11-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 23,24,25,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். 6-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியதிருக்கும். பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகள் சீரானபலனையே காணலாம். பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும்.தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 7-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர்.
விவசாயம்- உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். 14-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.14-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை காணலாம்.ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நற்பெயர் கிடைக்கும்.
பெண்கள்- குதூகலம் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் உதவிகரமாக இருப்பர். பூவியாபாரம் செய்யும் பெண்கள்நல்ல வருமானத்தை பெறுவர். 14-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். 3,4,5-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கும்.புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.12,13-ந் தேதிகளில் சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்- சீராக இருக்கும். வயிறு தொடர்பான உபாதை 7-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். அதன்பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 17,18-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.14,15,16-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்- 4,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,மஞ்சள் நலம் தரும் நிறங்கள். 3,4,5,10,11,12,13,19,20,21,22,26,27. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்த வரை புதன்,சுக்கிரன்,கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். செவ்வாய் 7-ந் தேதி வரையும், சூரியன் 16-ந் தேதி வரையும் சிம்மத்தில் நின்று நற்பலனை கொடுப்பார்கள். அதன்பின் அவர்கள் கன்னி ராசிக்கு சென்று நற்பலனை தர முடியாத நிலைக்கு தள்ளபடு-கிறார்கள். சுக்கிரன்,புதனால் உங்கள் செல்வாக்கு பெருகும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
தற்போது குரு அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்திருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருத்திருப்பார்கள். இதுதவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருந்தது. இதன் மூலமும் நற்பலன்கள் கிடைத்திருக்கும். அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது அவர் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார்.ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
குடும்பம்- தெய்வ அனுகூலம் கிடைக்கும். வசதிகள் மேம்படும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். புதிய உறவினர்கள் உதவியும் குடும்ப பெரியோர்கள் அனுசரணையும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் 7-ந் தேதிக்குள் வாங்கலாம். 1,2,28,29,30-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 8,9-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் 23,24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உண்டு.
உத்தியோகம்- மேல்அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 7-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.21,22-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்- கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். சூரியனால் லாபம் சிறப்பா இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 3,4,5,26,27-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.12,13-ந் தேதிகளில் போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பொதுநலம்- கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். சமூகநல சேவகர்கள் புகழ் வளர்முக மாகவே இருக்கும். அரசியல்வாதிகள் பணியில் திருப்தி காண்பர் செவ்வாயால் 7-ந் தேதிக்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.
மாணவர்கள்:ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயம்- நெல் ,சோளம், கடலை,கொண்டைக்கடலை சோளம், கேழ்வரகு,மஞ்சள், தக்காளி, பழவகைகள் போன்ற பயிர்கள் வகையில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் நல்ல வருவாய் கிடைக்கும். கோழி,ஆடு வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்-உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். 6-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14,15,16-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.விருந்து, விழா என சென்று வருவீர்கள். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர்.
உடல்நலம்- சிறப்பாக இருக்கும். செவ்வாயால் 7-ந் தேதிக்கு பிறகு வயிறு பிரச்சினை வரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 10,11,19,20-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். 17,18-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்- 5,6 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.பச்சை,சிவப்பு16-ந் தேதிவரை செந்தூரம்நலம் தரும் நிறங்கள். 1,2,6,7,12,13,14,15,16,21,22,23,24,25,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-பெருமாள் கோவிலுக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வாருங்க்ள. ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 17-ந் தேதிக்கு பிறகு காலையில் சூரியனை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
……

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த மாதபிற் பகுதியில் கூடுதல் பலனை காணலாம். செவ்வாய் 7-ந் தேதி பிறகும், சூரியன் 16-ந் தேதி பிறகும் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு வந்து நன்மை தர உள்ளார்கள்.மேலும் சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். அவர்கள் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்கள். 7-ந் தேதி பிறகு பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று 8-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுத்திருப்பார். பொருளாதார சரிவு, வீண்விரோத்தை ஏற்படுத்திருக்கலாம்.. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துபார்வை உங்களுக்கு சாதகமாக இருந்தது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுத்திரும். அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து 7-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது அவர் சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்-களுக்கு உயர்வை தருவார். மற்றும் அவரது 5-ம் இடத்துபார்வையும் சாதகமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார வளம் மேலும் உயரும்.
குடும்பம்-சிறப்பான நிலையில் இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரிகளால் பொருள் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 16-ந்தேதிக்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும்.வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்து சேரும். 3,4,5-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.விருந்து, விழா என சென்று வருவீர்கள். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 26,27-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்-அரசு ஊழியர்களுக்கு உழைப்புக்கு தக்க பலன்கள் கிடைக்கும். வேலைப்பளு இருக்கும். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும். மேல் அதிகாரி -களிடம் அனுசரித்து போகவும்.அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். 7-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.பதவி உயர்வு,சம்பள உயர்வு போன்றவற்றிற்கு தடை ஏதும் இல்லை. 14-ந் தேதிக்கு பிறகு தனியார்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும்.23,24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்- பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 7-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.16-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் இருக்காது. எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.14,15,16-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. 1,2,6,7,28,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்- கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள்.நற்பெயர் கிடைக்கும். சமூகநல சேவகர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் 7-ந் தேதிக்கு பிறகு சிறப்பான நிலையில் காணப்படுவர்.முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.14-ந் தேதிக்கு பிறகு குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயம்- வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருவாய்க்கு குறை இருக்காது. 7-ந் தேதிக்கு பிறகு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெண்கள்- பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். 6-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 7,8-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும். 17,18-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்-சூரியனால் இருந்து வந்த கண் தொடர்பான உபாதைகள்16-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும். 12,13 ,21,22-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர். வயிறு பிரச்சினை வரும்.19,20-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம்- 7,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள்.3,4,5,8,9,14,15,16,17,18,23,24,25,26,27 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் மேலும் முன்னேற்றம் காணலாம்.16-ந் தேதிவரை தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.
…….

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்த வரை சுக்கிரன்6-ந் தேதி கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு மாறினாலும் அவர் தொடர்ந்து நன்மை தருவார். மேலும் சனிபகவானும் பல்வேறு முன்னேற்றங்களை தந்து கொண்டு இருக்கிறார். உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.
தற்போது குரு அதிசாரம் பெற்று 7-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். குரு குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தந்திருப்பார். செல்வாக்கு, பணப்புழக்கம் அதிகரித்திருக்கும்.உத்தியோகத்தில் உயர்வை தந்திருப்பார்.அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இதுசாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம்.
மற்றய கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உஙகள் செல்வாக்கு சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் .
குடும்பம்- வசதிகள் சீராக இருக்கும்.6-ந் தேதிக்கு பிறகுகுடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். .16-ந் தேதிக்கு பிறகுகு செலவு அதிகமாக வாய்ப்பு உண்டு. எனவே சிக்கனம் தேவை. 6,7-ந் தேதிகளில் பெண்ககள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 1,2,28,29,30-ந் தேதிகளில் விருந்தினர் வருகை இருக்கும் ஆனால் 12,13-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகலாம். எனவே அப்போது அதிக நெருக்கம் வேண்டாம்.
உத்தியோகம்-அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் செல்வாக்கு சுமாராக இருக்கும். சற்று ஒதுங்கி இருக்கவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை 6-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். 26.27-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்- லாபத்திற்கு குறை இருக்காது.மாதத் தொடக்கத்தில் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவுடன் இருப்பர்.பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.7-ந் தேதிக்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 16-ந் தேதிக்கு பிறகு எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். ஆனால் உங்கள் மூளை பலத்தை பயன் படுத்தி தொழிலில் அதிகஆதாயம் காணலாம். 17,18-ந் தேதிகளில் எதிர்பராத வகையில் பணவரவு இருக்கும்.3,4,5,8,9-ந் தேதிகளில்சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பொருளாதார நஷ்டம் ஏற்படலாம். பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்- கலைஞர்கள் சிறப்பாக இருப்பர்.7-ந் தேதிக்குள் அரசிடம் இருந்து விருதுபோன்றவை கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர் -களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள் பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபடவேண்டும். 14,15,16-ந் தேதிகளில் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
மாணவர்கள்- குருபகவான் பக்க பலமாக இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் காணலாம். 14-ந் தேதிக்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். காலம் பொன் போன்றது. அதை வீணாக்காது படியுங்கள். அதன் பலன் கிடைக்காமல் போகாது. அதற்கு குருவின் பார்வை உதவிகரமாக இருக்கும்..
விவசாயம்- சீரான மகசூல் கிடைக்கும். எள், கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
பெண்கள்- மாதத் முற்பகுதியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம்நன் மதிப்பை பெறுவீர்கள். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவர். உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 10,11-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறலாம்.19,20-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்-சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 16-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 23,24,25-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். மனக்குழப்பம் ஏற்படலாம். 21,22-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்-4,6அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, கறுப்பு நலம் தரும் நிறங்கள்.1,2,6,7,10,11,17,18,19,20,26,27,28,29,30 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழபாடு- சந்தரப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள்.

……

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,கேது பல்வேறு நன்மைகளை தருவார்கள்.மற்றும் குரு 14-ந் தேதி சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார்.தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.இதனால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். குருவால் உடல்நல பாதிப்பு, மனதில் தளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை மிகவும் சாதகமாக காணப்பட்டது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்திருப்பார். அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அப்போது அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும்.
குடும்பம்- குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். பண வரவு இருக்கும். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 8,9-ந் தேதிகளில் அவர்களால் முன்னேற்றம் காணலாம்.3,4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.ஆனால் 14,15,16-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கிலேசம் வரலாம்.பொருள் இழப்பு ஏற்படலாம்.
உத்தியோகம்- விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். 6-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 1,2,28,29,30-ந் தேதிகளில் மிகவும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
வணிகம்-வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.நல்ல லாபம் கிடைக்க பெறலாம்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.14-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் இருக்காது. தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 19,20-ந் தேதிகளில் அதிக பணவரவு இருக்கும். 6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்- கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் காணப்-படுவீர்கள். அரசு வகையில் இருந்து புகழ், பாராட்டு கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு 6-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். 14-ந் தேதிக்கு பிறகு குருவால் சிறப்பான பலனை காணலாம். ஆசிரியரிடம் நன்மதிப்பு கூடும். நற்பெயர் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கும்.
விவசாயம்- விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக காய்கறி, பழ வகை பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். 14-ந் தேதிக்கு பிறகு ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்- குடும்பத்தில் முன்னிலை படுத்தப்படுவர். புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு 14-ந் தேதிக்கு பிறகு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர் 12,13-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறலாம். 21,22-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்- சீராக இருக்கும். செவ்வாயால் இருந்து வந்த பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மற்றும் பொருள் விரயம் முதலியன 7-ந் தேதிக்கு பிறகு மறையும். சூரியனால் 16-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். 17,18,26,27-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 23,24,25-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்- 6,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, சிவப்பு நலம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,8,9,12,13,19,20,21,22,28,29,30.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். வயதான முதாட்டிகளுக்கும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதமை தானம் செய்யலாம். புதன்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.
….

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாத முற்பகுதியில் கூடுதல் பலனை காணலாம். செவ்வாய் 7-ந் தேதி வரையும், சூரியன் 16-ந் தேதி வரையும் சிம்மத்தில் இருந்து நன்மைகள் தருவார்கள். மேலும் சுக்கிரன் 6-ந் தேதிக்கு பின்னர் நன்மை தருவார். மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தந்து திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்த்திருப்பார். பெண்களால் மேன்மை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமைந்திருந்தது. அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 4-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான இடம் தான்.அப்போது குரு மனஉளச்சலையும்,உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்.
குடும்பம்- புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம் தம்பதியினர் இடையே அன்பு, பாசம் மேலோங்கும்.6-ந் தேதிக்கு பிறகு பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.அவர்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குறிப்பாக 10,11-ந் தேதிகளில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 17,18-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம. சற்று ஒதுங்கி இருக்கவும். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.
உத்தியோகம்- பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 7-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். 16-ந் தேதிக்கு பிறகு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். யாரையும் எளிதில் நம்பாமல் உங்கள் வேலையை நீங்களே செய்வது நல்லது. 3,4,5-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்- தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 6-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சூரியனால் அரசின் உதவி கிட்டும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். 16-ந் தேதிக்கு பிறகு பொருள் விரையம் ஏற்படும். கடின உழைப்புக்கு ஈடுஇணை ஏதும் இல்லை. அது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது பலனை கொடுக்கும் அதை மனதில் கொண்டு உழையுங்கள். ஆனாலும் போதிய வருமானம் இருக்கத்தான் செய்யும். 21,22-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.மனதில் மகிழ்ச்சி ஏற்படும். 8,9,12,13-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்-கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர். காரியத்தடை. பொருள் நஷ்டம் முதலியன 6-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். அரசியல்வாதிகளுக்கு 7-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். ஆனால் பணவிஷயத்தில் எந்து குறையும் இருக்காது 19,20-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்
மாணவர்கள்- ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 14-ந் தேதிக்கு பிறகு படிப்பில் அசட்டையாக இருக்க வேண்டாம். என்னதான் படித்தாலும் புரியாத நிலை ஏற்படலாம். அதற்காக படிப்பே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதற்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள். அதன் பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயம்- இன்று விதை விதைத்தால் நாளை தானே பலனை பெற முடியும். அதை மனதில் ஏற்று உழையுங்கள். பின்னாளில் அதற்கு பலன் கிடைக்கும். தற்போது காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை போன்ற பயறு வகைகளில் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் சிறப்படையலாம். 7-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்- சிறப்பான மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.14.15.16-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 23,24,25 ஆகிய தேதிகளில் நல்ல பலனை காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும்.
உடல்நலம்- சீராக இருக்கும். 7-ந் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியது இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். 1,2,28,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 26,27-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்- 2,4 அதிர்ஷ்ட எண் ஆகும். செந்தூரம்,வெள்ளை ஆகியவை நலம் தரும் நிறங்களாகும். 3,4,5,6,7,10,11,14,15,16,21,22,23,24,25. ஆகிய தேதிகள் அனுகூலமானநாட்களாக அமையும்.
வழிபாடு- ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். 7-ந் தேதிக்கு பிறகு முருகன் கோவிலுக்கு சென்று, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை தரிசனம்செய்து அவர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள்.16-ந் தேதிக்கு பிறகு தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.
…….

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! புதன் சனி கொடுத்துக் கொண்டிருக்கும் நன்மையை இந்த மாதமும் தருவார்கள். இந்த மாதத்தை பொறுத்த வரை சுக்கிரன் 6-ந் தேதி வரையும், செவ்வாய்7-ந் தேதிக்குபிறகும் நற்பலனை கொடுப்பார்கள்.17-ந் தேதி சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறினாலும் அவர் தொடர்ந்து நன்மை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும்.எடுத்த காரியம் வெற்றி அடையும். மாத பிற்பகுதியில் மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார். அவரால் மனஉளச்சல், உறவினர்வகையில் வீண்பகையையும் ஏற்பட்டிருக்கலாம்.அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன மறையும். இருப்பினும் முயற்சியில் தடை ஏற்படும். வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்சவேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வை எந்த இடையூறையும் உடைத்து எறியும்.
குடும்பம்- கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். 7-ந் தேதிக்கு பிறகு நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். 12,13-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 19,20-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- புதன் சாதகமான நிலையில் இருப்பதால் கோரிக்கை நிறைவேறும். புதிய பதவி கிடைக்கும். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 7-ந் தேதிக்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். 6,7-ந் தேதிகளில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வணிகம்- தொழில் விருத்தி அடையும். லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.7-ந் தேதிக்கு பிறகு திருட்டு பயம் நீங்கும். 16-ந் தேதிக்கு பிறகு அரசின் உதவி கிட்டும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.23,24,25-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் வரலாம். 10,11,14,15,16-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்-கலைஞர்கள் சிறப்பான பலனை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 6-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். பொதுநல சேவகர்கள் நல்ல நிலையில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.7-ந் தேதிக்கு பிறகு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்- இந்த மாதத்தை பொறுத்த வரை புதன் சாதகமாக காணப்படுவதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டு பெறவும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்- நல்ல வருமானத்தை காணலாம்.நெல்,பாசிபயறு, சோளம், கரும்பு, எள் போன்ற பயிர்களில் அதிக மகசூலை காணலாம். பசுவளர்ப்பில் வருவாய் கிடைக்கும். 7-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம்.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆடு,கோழி வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்- தேவைகள் பூர்த்தியாகும். மாதத் தொடக்கத்தில் சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 7-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.26,27-ந் தேதிகளில் சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பண வரவு இருக்கும். 17,18-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம்.
உடல்நலம்-சிறப்பாக இருக்கும். செவ்வாயால் இருந்து வந்த உஷ்ணம், தோல், தொடர்பான நோய் 7-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும்.3,4,5-ந்தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம். ஒருவித பயம் ஆட்கொள்ளும். சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். 1,2,28,29,30-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்- 3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம், பச்சை நலம் தரும் நிறங்கள்.6,7,8,9,12,13,17,18,23,24,25,26,27. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் காளி வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். 6-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம். ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காயத்திரி தேவியை வணங்கி வரவும். ஏழைகளுக்கு மொச்கை தானம் செய்யுங்கள்.
……

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த நிûல் இனி மாறிவருகிறது.சுக்கிரன் 6-ந் தேதி துலாமிற்கு வந்தும், குரு 14-ந் தேதி மகரத்திற்கு வந்தும், சூரியன் 17-ந் தேதி கன்னிக்கு வந்தும் நன்மை தர உள்ளார்கள். மேலும் புதன், ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். அவர்களால் உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும்.
இதனால் பொருளாதார நிலை படிபடியாக அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் அகன்று காரிய அனுகூலம் ஏற்படும். மாதபிற் பகுதியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அவப்பெயர் பொல்லாப்பு போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் போகும். நினைத்த காரியம் நிறைவேறும். .
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக இருந்தன. குருவின் பார்வையால் எந்த இடையூறையும் உடைத்து எறிந்திருப்பார். அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும்.மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பம்- வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.குறிப்பாக14,15,16-ந் தேதிகளில் அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.ஆனால் 21,22-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- இது சிறப்பான காலம். பின்தங்கிய நிலை மறையும். நல்ல முன்னேற்றங்களை காணலாம். வேலையில் தொய்வு இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். 8,9-ந் தேதிகளில் எதிர்பாரா வகையில் நற்பலன்கள் கிடைக்கபெறலாம். பொருள் சேரும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்- உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். லாபம் அதிகரித்து கொண்டே இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். புதிய வியாபாரம் வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். செலவுகள் கட்டுப்படுத்தப்படும். 14-ந் தேதிக்கு பிறகு தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 26,27-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. 12,13,17,18-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன 6-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் பெறலாம். பொதுநல சேவகர்ளுக்கு எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். வருமானத்திற்கு குறை இருக்காது.8,9-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
விவசாயம்- வருமானம் அதிகரிக்கும். பாசிபயறு, உளுந்து, கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை சோளம்,மஞ்சள்,தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு
மாணவர்கள்- புதன் சாதக நிலையில் இருப்தால் இடர்பாடுகள் மறைந்து கல்வியில் சிறப்படையலாம். போட்டிகளிலும் வெற்றி காணலாம். மதிப்பெண்கள் அதிகரிக்கும். 14-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
பெண்கள்- குடும்பத்தில் உங்கள் தேவை அதிகரிக்கும். 6-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். மகிழ்ச்சியோடு காணப்படுவர்.சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல்அதிகாரிகளின் ஆதரவோடு கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 1,2,28,29,30 ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.19,20-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். பண வரவு இருக்கும்.
உடல்நலம்- பயணத்தின் போது கவனம் தேவை. 7-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 6,7-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.3,4,5-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டம்- 4,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை ,நீலம் நலம் தரும் நிறங்கள். 1,2,8,9,10,11,14,15,16,19,20,26,27,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.துர்க்கை வழிபாடு உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் தடைகள் அகன்று நன்மை கிடைக்கும்.16-ந் தேதி வரை தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

….

மகரம்

மகர ராசி அன்பர்களே! கடந்த காலத்தை போல் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். அதற்காக எல்லாமே பின்தங்கிய பலனாக நடக்குமோ என்ற அச்சம் வேண்டாம்.சுக்கிரன் 6-ந் தேதி வரை கன்னியில் இருந்தும், குரு 14-ந் தேதி வரை கும்பத்தில் இருந்தும் நன்மை தருவார்கள்.மேலும் கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்.அவரால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று 2-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள் மறைந்திருக்கும். தேவையான பொருட்களை வாங்கிஇருக்கலாம்.அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சுமாரன இடம். அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம் எனவே வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனதில்வேதனை வரலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
குடும்பம்- மாதத் தொடக்கத்தில் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். தம்பதியினரிடையே அன்பு பெருகும்.17,18-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பர். அவர்களால் உதவி கிடைக்கப்பெறலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.12,13-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 23,24,25-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோம்-கடந்த காலத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை காலம் நேரம் பார்த்து மாத முற்பகுதியில் கேட்டு பெறவும். அரசு ஊழியர்கள் 16-ந் தேதி வரை வேலையில் கவனமாக இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 10,11-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்- சீரான வருவாயை காணலாம்.வெளியூர் பயணம் அலைச்சல் ஏற்படும். புதியவியாபாரம் உழைப்பின் பேரில் கைகொடுக்கும். எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 1,2,28,29,30-ந் தேதிகளில் எதிர்பாராத வûயில் பணம் கிடைக்கும். 14,15,16,19,20-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 6-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சமூகநல சேவகர்கள் அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். 26,27-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்- தற்போது சிறப்பான பலனையே அனுபவித்து வருகிறீர்கள். 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை. ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது.
விவசாயம்-உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். யாரையும் நம்பி காசை கொடுத்துவிட வேண்டாம்.எந்த வேலையும் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. மானாவாரி பயிரில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
பெண்கள்- குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண்காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 14-ந் தேதிக்கு பிறகு குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 3,4,5-ந் தேதிகளில் அக்கம் பக்கத்தினர் மிகவும் உதவிகரமாக இருப்பர். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். 21,22-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம்- செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் 7-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். அதன்பிறகு பயணத்தின் போது கவனம் தேவை. 6,7-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.8,9-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்-7,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,மஞ்சள் நலம் தரும் நிறம்.1,2,3,4,5,10,11,12,13,17,18,21,22,28,29,30.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். புதனுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யலாம். சூரியனை தரிசனம் செய்து வாருங்கள். இதனால் தடைகள் விலகி மறைந்து முன்னேற்றம் காணலாம்.
…..

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன், சுக்கிரன் நற்பலனை கொடுப்பார்கள். பொருளாதார வளம் மேம்படும்.குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலையே.குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக இருந்தது. அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பொருள் விரயம், மனதில் வருத்தம், வீண்அலைச்சல், பல்வேறு தொல்லைகள் முதலியன ஏற்படலாம்.
சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். எனவே இந்த காலம் சிறப்பானதாக அமையும். சூரியனால் இருந்து வரும் அவப்பெயர் 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பம்-புதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். கணவன்- மனûவி இடையே அன்பும் பாசமும் ஏற்படும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 19,20-ந் தேதிகளில் அவர்கள் வகையில் உதவி கிட்டும். 14,15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 26,27-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான பலனை அடைவீர்கள். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும்.நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.சிலர் பதவி உயர்வு காண்பர்.11,12-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்- எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். புதிய தொழில் தொடங்க இது உகந்த காலம் அல்ல. முதல் இல்லாத வேலை எது வேண்டுமானாலும் செய்யலாம்.வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஏற்படும்.16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொளள்வும். 3,4,5-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். 17,18,21,22-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு கிடைக்கும். பெண்களால் பொருளாதார வளம் கூடும்.பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் பணியில் திருப்தி காண்பர் 1,2,28,29,30-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
மாணவர்கள்-புதன் சாதக நிலையில் இருப்தால் போட்டிகளிலும் வெற்றி காணலாம். கல்வியில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறுபடும். கல்வியில் நல்ல வளத்தை காணலாம்.நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயம்-அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்யுங்கள். அதன் மூலம் ஓரளவு வரு மானமும் கிடைக்கும். நஷ்டம் தவிர்க்கப்படும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புது சொத்து வாங்க சிலகாலம் பொறுத்து இருங்கள்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்- நற்பெயர் எடுப்பர்.உற்சாகமான நிலையை அடைவீர்கள்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபத்தை பெறுவர். 23,24,25-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். 6,7-ந் தேதிகளில் சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்- உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். சூரியனால் இருந்து வந்த வயிறு தொடர்பான உபாதைகள் 16-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 10,11-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 8,9-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்- 4,5ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,பச்சை சிவப்பு நலம் தரும் நிறங்கள். 3,4,5,6,7,12,13,14,15,16,19,20,23,24,25. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்க ளாக அமையும்.
வழிபாடு-சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.தினமும் சூரியதரிசனம் செய்து ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் மேலும் முன்னேற்றம் காணலாம்.
….

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய் 7-ந் தேதி வரையிலும் சூரியன் 16-ந் தேதி வரையிலும் சிம்மத்தில் நின்று நற்பலனை கொடுப்பார்கள். சுக்கிரன் 6-ந் தேதிக்கு பிறகு நற்பலனை கொடுப்பார்.மேலும் சனி, ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். அவர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
தற்போது குருபகவான்அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இங்கு அவரால் பொருள் விரயம், மனதில் வருத்தம்,வீண் அலைச்சல் முதலியன ஏற்பட்டிருக்கலாம். அவர் 14-ந் தேதி அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்-செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம்.
மாத முற்பகுதியில் சூரியனால் பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு சூரியன் சாதமகற்ற இடத்திற்கு செல்வதால் சிலர் அவப்பெயரை சந்திக்கலாம். எனவே வீண்விவாதங்கû தவிர்க்கவும்..
குடும்பம்- புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். 7-ந் தேதி வரை செவ்வாயாலும் ,6-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனின் பலத்தாலும் வசதிகள் பெருகும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 21,22-ந் தேதிகளில் அவர்கள் மிகவும் உறுதுணையா இருப்பார்கள்.அவர்களால் மூலம் பண உதவி கிடைக்கும். 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிûட்கும். ஆனால் 1,2,28,29,30-ந்தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். கணவன்- மனைவி இடையே அன்பு இருக்கும் ஆனால் 7-ந் தேதிக்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம்-வேலையில் திருப்தி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குருவின் அருளால் 14-ந் தேதிக்கு பிறகு சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 7-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.14,15,16-ந் தேதிகளில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்- லாபத்தில் குறை இருக்காது. பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய வியாபாரம் அனு கூலத்தை தரும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 14-ந் தேதிக்கு பிறகு தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.6,7-ந் தேதிகளில் எதிர்பாராக வகையில் பணவரவு இருக்கும். 19,20,23,24,25-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்-கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 6-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.7-ந் தேதிக்கு பிறகு பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்-சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். 14-ந் தேதிக்கு பிறகு வளர்ச்சி இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும்.
விவசாயம்-கிழங்கு, காய்கறி பழவகை பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். கால்நடைகள் சிறப்பை தரும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறலாம் வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் 7-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பெண்கள்- குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவீர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.7-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.குருவின் பார்வையால்14-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். 26,27-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.8,9-ந் தேதிகளில் உல்லாச பயணம் மேற்கொள்ளலாம். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.
உடல்நலம்-சிறப்பாக இருக்கும். சூரியனால் 16-ந் தேதிக்கு பிறகு வயிறு பிரச்சினை வரலாம். அலைச்சல் அதிகரிக்கும்.அவப்பெயர் வரலாம். 12,13-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.3,4,5-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 10,11-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்-47ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.கறுப்பு ,நீலம்16-ந் தேதி வரை செந்தூரம். 6,7,8,9,14,15,16,17,18,21,22,26,27. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்க ளாக அமையும்.
வழிபாடு- சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள் 16-ந் தேதிக்கு பிறகு அதிகாலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *