June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை கட்டுப்படுத்தும் பாம்பின் விஷம்; பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

1 min read

Snake venom controlling the corona; Discovery by scientists in Brazil

2/9/2021

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில், ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவதை, பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா மருந்து

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள், ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர். இந்த பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரசில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *