June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா

1 min read

Corona for 2 more students in Tanjore district

5.9.2021
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நாமக்கல், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில்,இன்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணாக்கார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேராவூரணி தனியார் பள்ளி மாணவிக்கும், திருப்புவனம் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் ஒரு மாணவர், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *