June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இளவரசரின் விமானத்தை தடுத்து நிறுத்திய எறும்புகள்

1 min read

The ants that stopped the prince’s plane

6.9.2021

பூடான் இளவரசர் செல்ல இருந்த விமானத்தில் எறும்புகள் கூட்டம் அணிவகுத்து சென்ற நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

எறும்புக்கூட்டம்

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா (ஏ.ஐ.-111) விமானம் ஒன்று லண்டன் புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பூடான் இளவரசர் வர்த்தக வகுப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த விமானத்தில் எறும்புகள் அணிவகுத்து சென்றுள்ளன. இந்த விவகாரம் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து, அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. எனினும், வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 5.22 மணியளவில் புறப்பட்டு சென்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *