November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென் மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

1 min read

Heavy rain in southern districts: Water level rises in Papanasam Dam

11.11.2026
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்க ளாக தொடர் மழை பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று பகலில் மழை இல்லை, வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை கொட்டியது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஊத்து தோட்ட பகுதியில் 113 மில்லி மீட்டர், நாலுமுக்கு தோட்ட பகுதியில் 105 மி.மீ. மழை பதிவானது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 40 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று மேலும் சுமார் 2 அடி உயர்ந்து 71.75 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1,451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 40 கன அடி தண் ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 65.10 (85) அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 219 கன அடியாக அதிகரித்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 22 அடி உயர்ந்து 58½ அடியாக (84) உள்ளது. அணைக்கு நீர்வரத்து 72 கன அடியாக அதிகரித்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற் றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் மழைப்பொ ழிவு குறைந்ததால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு தணிந்தது. ஆனால், நீர்வ ரத்து அதிகரித்தே இருந்தது. இருந்தபோதும், பழைய குற்றாலம் தவிர மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவியில் ஏராளமான சுற்றுலா பய ணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக நீராடினர். பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீரா னதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.மணிமுத்தாறு அருவியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட் டது. களக்காடு தலையணையை மூழ்கடித்து வெள்ளம் தொடர்ந்து செல்வதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-மாஞ்சோலை-75, காக்காச்சி-93, நாலுமுக்கு-105, ஊத்து-113, பாளையங் கோட்டை-12, நெல்லை-25, சேர்வலாறு-44, பாபநாசம்-40, மணிமுத்தாறு-36, கன் னடியன் அணைக்கட்டு-24, சேரன்மாதேவி-15, களக்காடு-87, மூலைக்கரைப் பட்டி-45, அம்பை-16, ராதாபுரம்-7, நாங்குநேரி-44, கொடுமுடியாறு-5.தென்காசி-19, கடனா-66, ராமநதி-36, ஆய்க்குடி-16, கருப்பாநதி-22, சங்கரன்கோ வில்-7, செங்கோட்டை-3, குண்டாறு-1, அடவிநயினார்-3, சிவகிரி-2.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *