கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுடி
1 min read
Kodanadu murder case: Supreme Court dismisses case
7.9.2021
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோடநாடு கொலை வழக்கு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுபவ் ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறைக்கு மேல் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி
இதனை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்தது. இதனை அடுத்து அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள். அவர்கள், “கோடநாடு என்பது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் உள்ளது. இந்த வழக்கு மேல் விசாரணையில் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும். மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.” என்றார்கள்.