May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படமாட்டாது; நிர்மலா சீதாராமன் தகவல்

1 min read

Petrol and diesel prices will not be included in the GST; Nirmala Sitharaman Information

17/9/2021

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படாது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவிக்க இருக்கிறோம். ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.