June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 min read

Additional vaccine for Tamil Nadu – Chief Minister Stalin’s letter to the Prime Minister

20.9.2021
தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை மேலும் துரிதப்படுத்த முடியும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *