தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா; 23 பேர் சாவு
1 min read
Corona for 1,661 people in Tamil Nadu today; 23 deaths
20.9.2021
தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளத. 23 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 041- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,623 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,984 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,360 ஆக உயர்ந்துள்ளது
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கெரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக இருந்த நிலையில் இன்று (20ம் தேதி) 206 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 211 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும், செங்கல்பட்டல் 111 ேருக்கும், தஞ்சையில் 90 பேருக்கும், திருப்பூரில் 91 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் இன்று 13 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.