காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்கவில்லை; தமிழகம் குற்றச்சாட்டு
1 min read
Karnataka does not supply Cauvery water properly; Tamil Nadu accused
27.9.2021
காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
காவிரி மேலாண்மை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
செப்டம்பர் 23-ந் தேதி வரை 37.3 டிஎம்சி காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கார்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.