நடிக்கத் தெரியாத வெள்ளை உள்ளமே!
1 min readShivaji Ganesan is a white man who does not know how to act
2.10.2021
(செய்திசாரலில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரையை படித்து அவருக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார், எழுத்தாளர் வே.தபசுக்குமார்.)
பராசக்தி அருளால் திருவிளையாடல் நடத்தி தெய்வமகனாகி, கர்ணனாகி, திருவருட்செல்வராகி, உயர்ந்தமனிதனாகி, வசந்தமாளிகையில் அமர்ந்து, தமிழ்சினிமாவின் கவுரம் காத்து, தமிழ் ரசிகர்களின் பாசமலராகி, புதியபறவை யாக வலம் வந்தவர். வீரபாண்டியகட்டபொம்மனாக மீசைமுறுக்கி, கப்பலோட்டியதமிழனாக நெஞ்சைநிமிர்த்தி, பாலும்பழமுமாக இனித்து தில்லானாமோகனாம்பாளில் ஒலித்து, தங்கப்பதக்கமாக ஜொலித்து தவப்புதல்வனாக வாழ்ந்தவர் சிவாஜிகணேசன்.
உத்தமபுத்திரனே பலேபாண்டியாவில் சிரிக்கவைத்தாய், ரத்ததிலகமிட்டு, திரிசூலம் ஏந்தி, வந்தவரே
சவாலேசமாளி என்று சிவகாமிமைந்தனின் ஆசி பெற்று வளர்ந்தவரே, ஊட்டிவரை உறவு என்றும் கலாட்டா கல்யாணம் என்றும் நகைச்சுவையில் குலுங்கவைத்தவரே….. வளர்க உன் புகழ், நடிப்பு இமயமே மக்கள் முன் நடிக்கத்தெரியாத வெள்ளை உள்ளமே, உன்னால் விருதுகளுக்கு பெருமை,
கலைத்தாயின் தலைமகனே மீண்டும் சிங்கதமிழனாக பிறந்துவா.
தங்கத்தமிழின் குரலோசை முழங்கட்டும்.
- வே. தபசுக்குமார். புதுவை.