June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 22,431 பேருக்கு கொரோனா; 318 பேர் சாவு

1 min read

Corona for another 22,431 in India; 318 deaths

7.10.2021

இந்தியாவில் மேலும் புதிதாக மேலும் 22,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 318 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,431 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் 2,44,198 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 3,38,94,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,32,00,258 பேர் குணமடைந்துள்ளனர். 4,49,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,09,525 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 92,63,68,608 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *