அங்கோலா நாட்டில் தங்க சுரங்கத்தில் விபத்து; 11 பேர் பலி
1 min read
Accident at a gold mine in Angola; 11 people were killed
10.9.2021
அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்தனர்.
தங்கச் சுரங்கம்
அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுவதால் ஏற்படும் விபத்துகளில் கடந்த மூன்று மாதங்களில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.அந்த பகுதியின் உள்ளூர் காவல்துறை இந்த தகவலை இன்று நிருபர்களுக்கு தெரிவித்தது.
ஹம்போ மாகாணத்துக்கான தேசிய காவல்துறையின் ஆணையர் பிரான்சிஸ்கோ ரிபாஸ் நிருபர்களிடம் பேசுகையில், ‘அங்கோலா நாட்டின் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ ஆகிய மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அங்கோலா நாட்டிலுள்ள இந்த பகுதிகளில் அதிக அளவில் கைவினை தங்க சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 2000 சுரங்க தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுகின்றனர்’ என்றார்.
இந் நிலையில் ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை,உள்ளூர் மக்கள் சட்டவிரோதமாக சுரங்க பணியில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.