இந்தியாவில் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா; 214 பேர் சாவு
1 min read
Corona for 18,166 people in a single day in India
10.10.2021
இந்தியாவில் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 214 பேர்இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இது நேற்று 19,740, நேற்று முன்தினம் 21,257 மற்றும் கடந்த 7ந்தேதி 22,431 ஆக இருந்தது. இதனால், தொற்று வித்தியாசம் கடந்த சில நாட்களை விட தொடர்ந்து குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.
214 பேர் சாவு
கடந்த 24 மணிநேரத்தில் 214 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 589 ஆக உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
23,624 பேர் குணமடைந்து சென்ற நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 71 ஆயிரத்து 915 ஆக உள்ளது. இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.99% ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,30,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.