June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

விசாரணைக்கு ஒத்துழைக்காத மந்திரி மகன் முன்னுப்பின் முரணகா பதில் அளித்தார்

1 min read

The son of a minister who did not cooperate with the investigation

10.10.2021
லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை வழக்கில் மத்திய மந்திரி மகன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றது தொடர்பாக மத்திய மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவரை கைது செய்வதற்கு போலீசார் முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து உடனடியாக ஆஜராகும்படி அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை. இதையடுத்து 2-வது சம்மன் கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா நேற்று லக்கிம்பூர் மாவட்ட போலீசார் முன்பு ஆஜரானார். அவரை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 12 மணிநேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

முன்னுக்குப்பின் முரண்

ஆனால் ஆசிஷ் மிஸ்ரா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக போலீசார் கூறினார்கள். தகவல்களை மறைக்கும் வகையில் ஒரேவார்த்தைகளை திரும்பத்திரும்ப சொன்னதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நீண்டநேரம் விசாரணை நடத்திய பிறகும் அவர் போலீசுக்கு சரியான ஒத்துழைப்பை தரவில்லை என்றும் கூறினார்கள்.
இதனை அடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *