தமிழகத்தில் இன்று 1,280 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு
1 min read
Corona for 1,280 people in Tamil Nadu today; 19 deaths
13.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,289 -ல் இருந்து 1,280 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,453 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,38,288 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,279 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,280 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,82,137 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,88,80,069 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 743 பேர் ஆண்கள், 537 பேர் பெண்கள். 1,453 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,30,654 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,833 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக இருந்த நிலையில் இன்று 173ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 145 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 17 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.