June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 18,987 newcomers in India

14.10.2021
இந்தியாவில் நேற்று புதிதாக 18,987 கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரு நாளில் 246 பேர் இறந்துள்ளனர்.

14.10.2021

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இதன்படி நேற்று முன்தினம் 14,313 பேருக்கும், நேற்று 15,823 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று 19.99 சதவீதம் உயர்ந்து புதிதாக 18,987 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 11,079 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730 ஆக அதிகரித்துள்ளது.

246 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று கலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,62,709 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,06,586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 96,82,20,997 பேருக்கு ( இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,66,347 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 13,01,083 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58,76,64,525 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *