June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரி, வீரர் வீர மரணம்

1 min read

Army officer, soldier martyred in Jammu and Kashmir

15.10.2021
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ அதிகாரி மற்றும் வீரர் பலியாகினர்.

தேடுதல் வேட்டை

காஷ்மீரில் உள்ள பூஞ்ச்- ராஜோரி வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவ அதிகாரி, வீரர் என ராணுவம் தரப்பில் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
இதேபகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் ஜம்மு பூஞ்ச்- ராஜோரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

கடந்த 10-ந் தேதி பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய அதே பயங்கரவாதிகள் தற்போதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ வட்டார தகவல்கள் கூறுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *