June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களுக்கு உறவினர்களை சந்திக்க அனுமத்த 7 போலீசார் சஸ்பெண்டு

1 min read

7 policemen suspended for allowing relatives arrested in Pollachi case

21.10.2021
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில் உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததாக ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக கோவை மகளிர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள் அவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு போலீசார் அனுமதித்தனர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வெளியானது.

சஸ்பெண்டு

இந்த நிலையில், சேலம் மாநகர போலீஸ் சூப்பிரெண்டு நஜ்மல் ஹோடா, சேலம் ஆயுதப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார் ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்டு (பணியிடை நீக்கம்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *