தமிழகத்தில் இன்று 1,061 பேருக்கு கொரோனா; 12 பேர் பலி
1 min readCorona for 1,061 people in Tamil Nadu today; 12 killed
28.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,075- இருந்து 1,061 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,286 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,22,835 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 26,99,554 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 622 பேர் ஆண்கள், 439 பேர் பெண்கள். இன்று 1,286 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,51,431 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,072 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக இருந்த நிலையில் இன்று 135 ஆக குறைந்துள்ளது.
கோவை 132 பேருக்கும், செங்கல்பட்டில் 97 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 15 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.