நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min readActor Rajinikanth admitted to hospital
28.10.2021
நடிகர் ரஜினிகாந்த் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழு உடல் பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது மனைவி லதாரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆஸ்பத்திரியல் அனுமதி
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம். ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கி இருப்பார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி தற்போது நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மருத்துவமனைக்கு நடிகரும் உறவினருமான ராகவேந்திரா வந்துள்ளார். மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் இரவோ அல்லது நாளை காலையிலோ நடிகர் ரஜினி வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.