May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 11,903 பேருக்கு கொரோனா; 311 பேர் சாவு

1 min read

Corona for a further 11,903 in India; 311 deaths

3.11.2021

இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சரியாக 11 ஆயிரத்து 903 ஆக பதிவாகி உள்ளது. 311 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம் கண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு நேற்று 10 ஆயிரத்து 423 ஆக பதிவாகிய நிலையில் இன்று 11 ஆயிரத்து 903 ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 159 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தனர். இதனால் இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 209 ஆக சரிவு அடைந்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,51,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.22% உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 107.29 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்கள் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டவை ஆகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.