தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு
1 min read
Corona for 945 people in Tamil Nadu today; 15 deaths
4/11/2021
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 962 இல் இருந்து 945 ஆக குறைந்துள்ளது. 15 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
1,14,043 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 945 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 962 இல் இருந்து 945 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 15 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,191 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 1,047 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,59.407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,012 ஆக உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 72 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டில் 82 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 83 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 109 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 107 ஆக குறைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.