இந்தியாவில் மேலும் 12,729 பேருக்கு கொரோனா; 221 பேர் சாவு
1 min read
Corona for another 12,729 in India; 221 deaths
5.11.2021
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 12 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 221 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
நாடு முழுவதும் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 3,43,21,025 லிருந்து 3,43,33,754 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12 ஆயிரத்து 165 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,12,794 லிருந்து 3,37,24,959 ஆக உயர்ந்துள்ளது.
221 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 221 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,59,652 லிருந்து 4,59,873 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடந்தோர் விகிதம் 98.23 சதவீதம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 5,65,278 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 107.70 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை வெளியிட்டது.