June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

4 வயது சிறுமி நரபலி கொடுக்க முயன்ற பூசாரி உள்பட 12 பேர் கைது

1 min read

Twelve people have been arrested, including a priest who tried to kill a 4-year-old girl

10.11.2021
4 வயது சிறுமி நரபலி கொடுக்க முயன்ற பூசாரி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

00000000000000000

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ளது பூஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்படப் போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் செய்து வந்ததை கண்டு பிடித்தனர்.

கைது

உடனடியாக பூசாரி உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நரபலி கொடுப்பதற்காக அழைத்து வரப்பட்ட நான்கு வயது சிறுமியை போலீசார் மீட்டனர்.

அவர்கள் பூஜை செய்த இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதையல் இருப்பதாக கருதி ,அதை எடுப்பதற்காக பூஜைகள் நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சம்பவம் நடந்த அன்று காலை இரண்டு கார்களில் வந்து உள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரால் மீட்கப்பட்ட அந்த சிறுமி எங்கிருந்து வந்தார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *