அசாமில் ஆட்டோ, லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி
1 min read
9 killed in auto-lorry collision in Assam
11.11.2021
அசாமில் ஆட்டோ ரிக்ஷாவும், வேகமாக வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
விபத்து
அசாம் மாநிலத்தில் அசாம்-திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக வந்த லாரி ஒன்று எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சத் பூஜையை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.