இந்தியாவில் மேலும் 13,091 பேருக்கு கொரோனா; 340 பேர் சாவு
1 min read
Corona for a further 13,091 people in India; 340 deaths
11.11.2021
இந்தியாவில் மேலும் 13,091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 340 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 13,091- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,878 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 340 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,44,01,670 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,00,925 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 1,38,556 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 57,54,817 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,10,23,34,225 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.