June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா; 4 பேர் சாவு- தென்காசியில் பாதிப்பு இல்லை

1 min read

Corona for 820 people in Tamil Nadu today; 4 killed – No casualties in Tenkasi

11.11.2021

தமிழகத்தில் இன்ற 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,12,404 ஆக அதிகரித்து உள்ளது
962 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,66,140 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

தொற்று பாதிப்பைக் கண்டறிய 1.02 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10,013 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.11 ம் தேதி) 125 ஆக குறைந்துள்ளது.

கோவையில் 109 பேருக்கம், செங்கல்ப்டடில் 63 பேருக்கும், ஈரோட்டில் 68 பேருக்கும், நெல்லையில் 14 பேருக்கும் பேருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்காசியில் இன்று கொரோனா தொற்று இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *