June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

உத்தரபிரதேசத்தில் 123 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

1 min read

Zika virus infects 123 people in Uttar Pradesh

15.11.2021
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இதுவரை மொத்தம் 123 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

ஜிகா வைரஸ்

நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் இதுவரை மொத்தம் 123 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதனை கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் அறிவித்து உள்ளார். ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னோஜ் நகரில் ஒருவரும், லக்னோ நகரில் 3 பேரும் கண்டறியப்பட்டு உள்ளனர். தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர்பில் இருப்பவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *