தமிழகத்தில் இன்று 772 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min read
Corona for 772 people in Tamil Nadu today; 13 dead
19.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 775 -ல் இருந்து 772 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 884 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,02,383 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 772 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,18,750 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,31,56,461 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 461 பேர் ஆண்கள், 311 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 884 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,73,448 ஆக உயர்ந்துள்ளது.
13 பேர் சாவு
தமிழ்நாட்டில் 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,349 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக இருந்த நிலையில் இன்று 120 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 119 பேருக்கும், ஈரோட்டில் 74 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், திருப்பூரில் 50 பேருக்கும், நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.