August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

1 min read

No other judges can be added to the Arumugasami Commission- Supreme Court judgment

24.11.2021-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் எனக்கூறிய நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *