புளியங்குடி “சிங்கப்பெண்” குழுவிற்கு டி.ஐ.ஜி பாராட்டு
1 min read
DIG praises Puliyangudi’s “Singappen” (Lioness) team.
28.9.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிங்கப்பெண் குழுவில் பணிபுரியும் உதவிய ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை திருநெல்வேலி சரக டிஐஜி இரா.திருநாவுக்கரசு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் துரிதமாகவும் சிறப்பாகவும் புலனாய்வு மேற்கொண்ட “சிங்கப்பெண்” குழுவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்ராணி மற்றும் தலைமைக் காவலர் பானுமதி ஆகியோரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.